நாடாளுமன்றத்தில் புகைக் குண்டு: கைதான 6 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..!
நாடாளுமன்றத்தில் புகை குண்டு: வீசியதாகவும் அதற்கு உதவியாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அத்துமீறி புகை குப்பிகளை வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது சம்பந்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களது வங்கி கணக்கு பரிமாற்றம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் ஆறு பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் உள்ளதாகவும், மேலும் அவர்களது சமூக வலைதள பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகத்சிங் ரசிகர் மன்றம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட முகநூல் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆறு பேரையும் ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டிருப்பதால் அதன் விவரங்கள் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு கோரி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva