1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (09:29 IST)

சக போட்டியாளரை ஆள்வைத்து தாக்கிய பிக்பாஸ் வின்னர்… கைது செய்த போலீஸ்!

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி லட்சக்கணக்கான ரசிகர்களால் விருப்பமாக பார்க்கப்பட்டு வருகிறது. தெலுங்கில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இதில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பல்லவி பிரசாத் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி நடக்கும் போது இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தார். ரன்னராக நடிகர் அமர்தீப் சவுத்ரி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு அருகில் நடிகர் அமர்தீப்பின் கார் பல்லவி பிரசாத்தின் ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் அவரின் காரும் சேதமடைந்தது. இதையடுத்து அமர்திப் தரப்பில் பல்லவி பிரசாத் ஆள்வைத்து தன்னை தாக்கியதாக புகார் கொடுக்க, போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இப்போது பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.