1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sivasankar master no more

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

சிவசங்கர் மாஸ்டர்
பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.
 
நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.. இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
மண் வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சிவசங்கர் மாஸ்டர், மகதீரா படத்தில் தீர தீர என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றுளார்.  
அடுத்த கட்டுரையில்
இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த கேப்டன் பதவி: ஆனால் திடீரென ஏற்பட்ட திருப்பம்!