ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (10:01 IST)

சிவசங்கர் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்!

நடன இயக்குனர் சிவசங்கர் கொரோனா பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

சிகிச்சைக்கு தேவையான பொருளாதார வசதி இல்லை என்று அவரது குடும்பத்தினர் சார்பாக வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நடிகர் சோனு சூட் சிவசங்கரின் மருத்துவ செலவுகளுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் ‘ அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளேன். அவரைக் காப்பாற்ற என்னால் முடிந்ததை செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போது நடிகர் தனுஷும் அவரின் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவிக்கரம் நீட்டியுள்ளாராம். தனுஷின் திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பட பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் சிவசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.