1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai schools, colleges holiday tomorrow

சென்னை பள்ளிகள், கல்லூரிகள் நாளை விடுமுறையா?

சென்னை
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம் 
 
இந்தநிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தூத்துக்குடி, நெல்லை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து மேலும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
புதுவையிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: எத்தனை நாட்கள்?