வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (16:55 IST)

8 வழக்குகளிலும் ஜாமின்: விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

Sivasankar Baba
சிவசங்கர் பாபா மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து விரைவில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை அருகே சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார் 
 
இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும் அவற்றில் ஐந்து வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்த சிவசங்கர் பாபா எட்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது