வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (10:27 IST)

சிவகாசியில் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து! – மீட்பு பணிகள் தீவிரம்!

சிவகாசியில் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து! – மீட்பு பணிகள் தீவிரம்!
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் பாறைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 பேர் ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் இரண்டு அறைகள் தரைமட்டமாகியுள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து சிக்கியவர்களை மீட்க முயற்சித்து வருகின்றனர். இதுவரை 4 பேர் பலியாகியுள்ள நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.