1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (19:34 IST)

17 மில்லியனை தாண்டிய ‘’வலிமை’’ டிரைலர் வியூஸ்

‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 13 என்பது வியாழக்கிழமை என்பதும் அஜித்திற்கு சென்டிமென்டான தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஜனவரி 14, 15, 16, மற்றும் 18 ஆகிய நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் இந்த ஆறு நாட்களில் ‘வலிமை’ திரைப் படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 இ ந் நிலையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் டிரைலர்  சோனி மியூசிக் சவுத் ( sony music south)  மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் யூடியூப் தளத்தில் நேற்று ரிலீஸான நிலையில் இதுவரை சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வலிமை பட அப்டேட் வந்துள்ள நிலையில்  ரசிகர்கள் தியேட்டர்களில் பார்த்தும், சமூக வலைதளங்களில் டிரெயிலரை வைரலாக்கி வருகின்றனர்.