1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Vijay's Beast collides with KGF movie

'கேஜிஎப்- 2 ' படத்துடன் மோதும் விஜய்யின்' பீஸ்ட்'

#BeastFromApril
விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில்,   நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை  தற்போது வெளியிட்டுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும் படத்தின் அட்டகாசமான ஸ்டில் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

வரும் ஏப்ரல் மாதம்  உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யஷின் கே.ஜி.எஃப் படமும் ரிலீஸாகவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றியுள்ளது.

About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம்.. நடிகர் கமல் புத்தாண்டு வாழ்த்து