தொடர்புடைய செய்திகள்
- மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓவின் மகன் நீதிபதியாக தேர்வு. குவியும் வாழ்த்து..!
- 4 நலத்திட்டங்களை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. என்னென்ன திட்டங்கள்?
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F14 ராக்கெட்.. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து..!
- கலாநிதி மாறனுக்கு இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர் விருது. குவியும் வாழ்த்துக்கள்
- சென்னையின் சொந்த பையன் அஸ்வின்..! 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!!
சிங்காரவேலர் 165-ஆவது பிறந்தநாள்..! சமதர்மமும் சமூகமும் வளர பாடுபடுவோம்! முதல்வர் ஸ்டாலின்..!
சிங்காரவேலரின் 165-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-ஆவது பிறந்தநாள் இன்று என குறிப்பிட்டுள்ளார்.
ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
