வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (12:48 IST)

மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓவின் மகன் நீதிபதியாக தேர்வு. குவியும் வாழ்த்து..!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட  வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸின் மகன் ஏசுவடியான் டி.என்.பி.எஸ்.சி தேர்வின் மூலம்  சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 
 
உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக் கொண்டே இருப்பார் என்றும் அவரது ஆசையை நிறைவேற்றயதில் மகிழ்ச்சி என்றும் மிகவும் உதவியாக எனது குடும்பம் இருந்தது என்றும் ஏசுவடியான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
 
 
Edited by Siva