திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தும்..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!
திமுக ஆட்சியில் முதியோர் உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
தங்கள் ஆட்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அம்மா மினி கிளினிக்குகளை மூடினர் என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு என திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்