4 நலத்திட்டங்களை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. என்னென்ன திட்டங்கள்?
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நான்கு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அந்தத் திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டடம் திறக்கப்பட்டது.
2. இன்போசிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.30 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு வழங்கினார்
3. ஈரோடு, தூத்துக்குடி, கோபி, சத்தி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.
4. ரூ.204.57 கோடி செலவில் 1374 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.80.85 கோடி செலவில் துறைக் கட்டடங்கள், ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள், ரூ.3.92 கோடி செலவில் நூலக கட்டடங்கள் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டன
Edited by Siva