தொடர்புடைய செய்திகள்
- சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் சிறந்தது..! ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி.!!
- அனைவருக்கும் கல்வி திட்டம்.. ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
- தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்
- "தவறை மூடி மறைக்காதீர்கள்".! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்.!!
- பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது ஏன்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!
அமைச்சர் அன்பில் மகேஷை தரக்குறைவாக விமர்சிப்பதா? பாஜக கேள்வி..!
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களே அமைச்சர் அன்பு மகேஷ் அவர்களை விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் மகேஷ் அவர்களின் சமூகத்தள பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாகவும் கூறப்படும் நிலையில் ஒரு சிலர் அத்துமீறி அன்பில் மகேஷ் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் சமூக வலைதள பயன்பாட்டளர்களுக்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தனது சமூக வலைதளவில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநில அமைச்சரையே தரக்குறைவாக பேசும், எழுதும் சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
அமைச்சரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் திராவிடியன் ஸ்டாக்ஸ் உடனடியாக கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவுக்கோ அல்லது காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலுங்கு கானா ஆகிய திராவிட மாநிலங்களுக்கு புலம்பெயரலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
