1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seven people died in ammonia gas leak

திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவு!.. 7 பேர் மரணம்!..

ammonia
திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்போர் என்கிற கிராமத்தில் ஒரு தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று காலை சுமார் 60க்கும் மேற்பட்டவர் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு அமோனிய வாயு கசிவு ஏற்பட்டது.

அந்த வாயு கசிவு சுவாசித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் உடல்நிலை மோசமானதால் சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சிலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள்..

இதனையடுத்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று அவர்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 12 பேர் மரணமடைந்துவிட்டனர். 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய் தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர்களின் உடல் அரசு செலவிலேயே நல்லடக்கம் செய்யப்படும் எனவும் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
இன்று நீட் தேர்வு.. நேற்று ஒரு மாணவி, ஒரு மாணவர் தற்கொலை.. தேர்வு பயமா?