எடப்பாடியிடம் பாய்ந்து, தினகரனிடம் பம்மிய செந்தில் பாலாஜி –புரியாத புதிர்
நேற்று பிரம்மாண்டமாக கரூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் செந்தில் பாலாஜி அதிமுக வையும் முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சித்தார்.
தமிழக முதல்வரின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்த அதிருதி எம்.எல்.ஏ.கலின் பதவியை அதிமுக கொரடா பறித்தார். அது சம்மந்தமாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு 18 எம்.எல்.ஏ.களின் தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே ஆட்டி வருகிறது. தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக செந்தில் பாலாஜிஅதிமுக வில் இணைவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அதிரடியாக திமுக வில் இணைந்தார்.
அவர் திமுக வில் இணைந்தது சென்னையில் எளிமையாக நடந்தது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை திமுக வில் இணைக்கும் விழா கரூரில் பிரம்மாண்டமாக் நேற்று நடைபெற்றது. விழாவில் செந்தில் பாலாஜி பேச ஆரம்பித்தவுடன் அதிமுக அரசைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். ‘ என்னைத் துரோமி என எடப்பாடிப் பழனிச்சாமி கூறுகிறார். துரோகத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அவர் கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரானது எங்களால்தான். எடப்பாடி அவர்களே நீங்களும் நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று வெல்லுங்கள். அன்றிலிருந்து நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’ எனக் கூறினார்.
அவர் பேசிய பேச்சுக்குக் கூட்டத்தில் சிரிப்பலைகள் எழுந்தன. ஆனால் எந்த கட்சியில் இருந்து விலகி திமுக வில் இணைந்தாரோ அந்தக் கட்சியைப் பற்றியோ அல்லது அந்த கட்சியின் துணைப்பொது செயலாளரான தினக்ரன் மீதோ எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. அதுதான் ஏனென்று புரியாமலேக் கலைந்து சென்றது கூட்டம்.