திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 டிசம்பர் 2018 (17:35 IST)

செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி: ரவுண்டு கட்டி விளாசிய எடப்பாடியார்

இன்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசியது பின்வருமாறு, அண்ணன், தம்பிக்குள் பிரச்சினை ஏற்பட்டது போல் நமக்குள் ஏற்பட்டது, ஆனால் தற்போது இணைந்துவிட்டோம். 
அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்திருப்பது, அதிமுக என்ற குடும்பத்தின் பாச பிணைப்பை காட்டுகிறது. 
 
செந்தில் பாலாஜி கொள்கை பிடிப்பு இல்லாதவர், நன்றி மறந்து செயல்படுகிறார். அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி. 
 
பச்சோந்தி கூட சில காலம் கழித்துதான் நிறம் மாறும், ஆனால், செந்தில் பாலாஜி 5 கட்சிகள் மாறி எந்த கட்சியில் இருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார் என கூறி கடுமையாக விமர்சித்து பேசினார்.