திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (19:55 IST)

உழையுங்கள், உரிய பலன் கிடைக்கும்: செந்தில் பாலாஜிக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்

சமீபத்தில் அமமுக பிரமுகர் செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்த நிலையில் இன்று கரூரில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 30,000 பேர் திமுகவில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், செந்தில்பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் கூட்டத்தை காணும் போது, நம்மை வெல்பவர் இந்த நாட்டில் யாரும் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. மிக சரியான நேரத்தில் திமுகவில் சேர்ந்து உள்ளீர்கள், தேர்தல் வேலை இருக்கிறது; உழையுங்கள் உங்களுக்கு உரிய பலன் கிடைக்கும்

மத்திய, மாநில அரசுகளை வீழ்த்துவதே நமது நோக்கம். மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப் பணிகள்!' தமிழகத்தை காப்பாற்ற இவர்களை விரட்டும் ஜனநாயக போரில் இனி நமது முழக்கம் முழங்கிட வேண்டும்,

நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரலாம்; வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. திமுக-காங்கிரஸ் கூட்டணியை பார்த்து மோடியே பயப்படுகிறார் என்று ஸ்டாலின் பேசினார்.