ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (11:11 IST)

ஹைலைட்டே நம்ம தலதான்... செந்தில் பாலாஜிக்கு திமுகவில் ராஜபோக மரியாதை

இந்தியா முழுக்க வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக தேதிய கட்சிகளும் மாநில கட்சிகளும் இப்போதே தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன.  
 
இந்நிலையில், நேரத்தில் தமிழகத்தில் வேறு உள்ளாட்சி தேர்தலும், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க வாப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தற்போது திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. 
 
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் ஹைலைட்டே நம்ம தல செந்தில் பாலாஜிதான். 
ஆம், செந்தில் பாலாஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டதாம். செந்தில் பாலாஜிக்கு இதற்காக தனி ஹோட்டல், அதேபோல் ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து வர தனி கார் அனுப்பப்பட்டதாம். 
 
ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த அன்று அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் செந்தில் பாலாஜிக்கு திமுகவில் ராஜபோக மரியாதை வழங்கப்படுகிறது.