திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:07 IST)

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தம்பித்துரையினால் டெபாசிட் வாங்க முடியாது: செந்தில் பாலாஜி கடும் தாக்கு

அதிகாரிகள் துணை மட்டுமே தம்பித்துரைக்கு இருந்தாலும், மக்களின் துணை தம்பித்துரைக்கு இல்லை. எனவே அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.




அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி அதிக எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. அதேசமயம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக திமுக சார்பாக, திமுகவில் புதிதாக இணைந்த கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து இவர் திமுகவில் இணைந்துள்ளதால் இந்த இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணிக்கு இறுதி பிரச்சாரம் செய்வதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது என்று இவர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். அதாவது கரூரில் இறுதி பிரச்சாரம் செய்ய போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். அதேபோல் திமுக கூட்டணி கேட்கும் இடங்களை கொடுப்பதில்லை, அதிமுக கூட்டணி கேட்கும் இடங்களை தேர்தல் ஆணையம் வழங்குகிறது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரங்களை செய்வதில் கட்சிகள் மும்மரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் திமுக கூட்டணிக்கு நேரம் ஒதுக்குவதில் பாகுபாடு காட்டுவதைக் கண்டித்து கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.



தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கேட்கின்ற இடத்தை அளிக்க வேண்டும் என்று போராட்டம் செய்தனர். இவர்களின் போராட்டத்தை தொடர்ந்து போலீசார், இவர்களிடம் சமாதானம் பேசினார்கள். இந்த போராட்டம் காரணமாக, கரூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தினையடுத்து தேர்தல் நடத்தும் பொதுப்பார்வையாளர்கள் அங்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு, தி.மு.க கூட்டணியினர் மற்றும் அ.தி.மு.க கூட்டணியினர் அனுமதி கேட்ட நேரத்தினை தேர்தல் ஆணையத்திடம் சரிபார்த்து பின்னர், அவர்கள் (அ.தி.மு.க வினர்) முன் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆகவே மேலிட தேர்தல் ஆணையத்திடம் முறையாக பெற்று அவர்களுக்கு வரும் 16 ம் தேதி மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரைக்கும், அதிமுக வினருக்கும், அதே நேரத்தில் .தி.மு.க விற்கு 4 டூ 6 மணிக்கு என்று கூறி சென்றனர். இதனால் முற்றுகை மற்றும் உள்ளிருப்பு போராட்டம் விலக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, அதிகாரிகள் துணை மட்டுமே தம்பித்துரைக்கு இருந்தாலும், மக்களின் துணை தம்பித்துரைக்கு இல்லை. எனவே அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று கூறினார்.