1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (13:01 IST)

தினகரனா? வாய்ப்பே இல்ல!! கொதித்தெழுந்த செல்லூரார்: களேபரமான மீட்டிங்

தினகரன், சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுடன் தனி டீமாய் செயல்பட்டு வந்த தினகரன் அணியில் சமீபத்தில் செந்தில் பாலாஜி திமுக இணைந்துவிட்டார். இது அமமமுகவினரை பெரும் கலக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இதுஒருபுறமிருக்க அதிமுக தினகரன் பக்கம் இருக்கும் மீத எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. 
 
சமீபத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா தினகரன் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என கூறினார்.
இந்நிலையில் கூட்டுறவு சங்க விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், தினகரனை அதிமுகவில் சேர்த்துக்கொள்வீர்களா என கேட்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் பிரிந்து சென்றவர்களில் தினகரன், சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இருந்து இணையலாம் என தெரிவித்தார்.