டாஸ்மாக் பார்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!
டாஸ்மாக் பார்கள் திறப்பது எப்போது என்று குறித்த தகவலை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் 1200 க்கும் குறைவான பாதிப்பே தினசரி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் டாஸ்மாக் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பார்கள் திறக்கும் தேதியை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
மேலும் இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனை செய்யப் போவதில்லை என்றும் இனி வரும் காலங்களில் எந்தவித இலக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு நிர்ணயம் இருக்காது என்றும் அவர் கூறினார்
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்