1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil
மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டது என்றும் இதனால் சில இடங்களில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்து நிலைமை சரி செய்யப்பட்டது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாடு முழுவதும் 178 அனல் மின் நிலையங்களில் மிகவும் குறைவாக நிலக்கரி கையிருப்பு உள்ளதால் குஜராத் மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மின்வெட்டு இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன