1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (13:22 IST)

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா.? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்.!!

RS Bharati
செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்தத் தடையும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்
 
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த புகாரில், கடந்தாண்டு ஜூன் மாதம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. 
 
இது தொடர்பாக செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில்,   செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 
 
இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றார். எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

பாஜக எதிர்க்கட்சிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விடுத்து, திருந்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களுக்கு கேடுகாலம் தான் என்றும் அவர் விமர்சித்தார்.

 
செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதலமைச்சர் எடுப்பார் என தெரிவித்த ஆர்.எஸ் பாரதி அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று கூறினார்.