வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (12:56 IST)

உன் தியாகம் பெரிது - உறுதி அதனினும் பெரிது.! செந்தில் பாலாஜியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்.!!

Stalin
சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
 
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது என்றும் அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என்றும் உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது என்றும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.