1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (14:59 IST)

செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட  நிலையில் அவருக்கு ஏற்கனவே 8 முறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது 9வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டது.
 
கடந்த முறை சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் நவம்பர் 6ஆம் தேதி வரை காவலை நீட்டித்துள்ளது.
 
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நீதிமன்றக் காவல் இன்று நிறைவடைந்ததை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran