1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (17:58 IST)

டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. எத்தனை நாள் தெரியுமா?

TTF Vasan
டிடிஎஃப் வாசனுக்கு ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாகவும் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
யூட்யூபில் பிரபலமான டிடிஎப் வாசன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது ஜாமின் மனு  காஞ்சிபுரம் நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
அதுமட்டுமின்றி அவரது பைக்கை எரிக்கலாம் என்றும் அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  இன்று அவர் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. 15 நாள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் 30ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்,. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva