1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sivakasi Firecracker Factory Blast - 3 Arrested

சிவகாசி பட்டாசு கடை வெடி விபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

fire
சிவகாசியில் நேற்று இரண்டு இடங்களில் நடித்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரங்கபாளையம் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பட்டாசு கடை ஓனர் சுந்தரமூர்த்தி கனகராஜ் ராம்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்பு துறை இணை இயக்குனர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தல 3 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களுக்கு தல ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வங்க கடலில் வளிமண்டல சுழற்சி .. கனமழைக்கு வாய்ப்பு..!