1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (21:32 IST)

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பொறியாளர் அதிரடியாக கைது

bribe
திருப்பூர் போயம்பாளையத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பொறியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
திருப்பூர் மாநகராட்சி வடக்கு பகுதியிலுள்ள 2 வது மண்டல அலுவலகம் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் செயல்பட்டு வருகின்றது இங்கு இளநிலை பொறியாளராக சந்திரசேகர் பணியாற்றி வந்தார்.
 
இந்த நிலையில் இப்பகுதியில், குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரருக்கு 'பில்' தொகையை வழங்க லஞ்சம் கேட்டார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பில் தொகையை வழங்க ரூ 25 ஆயிரம் பணத்தை இளநிலை பொறியாளர் சந்திரசேகரிடம் கொடுத்த போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் சந்திரசேகரனை கைது செய்து அழைத்து சென்றனர்.