செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டிப்பு.. நீதிமன்றம் உத்தரவு..!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை இன்று நடந்தது. அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran