வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:27 IST)

செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன் தான் அமைச்சரவை மாற்றமா? திமுக வட்டாரம்..!

anna arivalayam
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்க பயணத்திற்கு முன்பே அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்த திமுக வட்டாரங்களில் பேசிய போது செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன் தான் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும், அப்போது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்றும் அந்த தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு சாதகமாக இருந்தால் அவர் வெளியே வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது அவருக்கு மீண்டும் அவர் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் தான் அமைச்சர் பதவி மாற்றம் இருக்கும் என்றும் துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலின் கிடைக்கும் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva