செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:10 IST)

100 கோடி மோசடி வழக்கில் எம்.எல்.ஏ., கைது.! அமலாக்கத்துறை அதிரடி..!!

Amatullah Khan
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானதுல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. 
 
ஆம்ஆத்மியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் டில்லி வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தபோது சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் ரூ.100 கோடி  நிதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக ஓக்லாவில் உள்ள அமானதுல்லாகான் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
 
இதையொட்டி அவரது வீடு முன்பு டெல்லி போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இந்த சோதனையில் கணக்கில் வராத ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 
இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அமானதுல்லாகான் வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினர். சுமார் 6 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்ற நிலையில் அமானதுல்லா கானை  அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.