1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மார்ச் 2026 (14:41 IST)

உங்களுக்கு இவ்ளோதான் சீட்!... முக ஸ்டாலின் கறார்!.. தேமுதிக அப்செட்!....

premalatha
நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சியை துவங்கிய போது முதல் இரண்டு தேர்தலிலும் தனித்து தேர்தலை சந்தித்தார். மூன்றாவது தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.. அந்த தேர்தலில் விஜயகாந்த் 29 தொகுதிகளில் வென்றார். தேமுதிகவை விட குறைவாக தொகுதியில் திமுக வென்றது. அதனால், விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. ஆனாலும், அதிமுக எம்எல்ஏக்களோடு சண்டை போட்டுசட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தினார்..

ஒரு கட்டத்தில் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.. எனவே தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து போனது. தற்போது தேமுதிகவின் வாக்கு வங்கி இரண்டு சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது. இந்நிலையில்தான், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது தேமுதிக. தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என பிரேமலதா கேட்டார். அவர் கேட்டபடி அவரின் சகோதரர் சுதீஷுக்கு திமுக ராஜ்ய சபா சீட்டும் கொடுத்துவிட்டது..

தற்போது தொகுதி பங்கீடு நடைபெற்று வரும் நிலையில், 10 தொகுதிகள் வரை தேமுதிக கேட்கிறாராம். ஆனால் திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் 10 தொகுதிகளை கொடுக்க முடியாது.. 7 தொகுதிகள் கொடுக்குறோம் என சொல்கிறதாம் திமுக. இதனால் பிரேமலதா அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது..