திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (17:04 IST)

ரவுடி,காவல்துறையை வைத்து அராஜகம் செய்யும் அதிமுக - செந்தில் பாலாஜி கண்டனம்(வீடியோ)

கரூரில், ஆளும் கட்சி ரவுடிகள் மற்றும் காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கரூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் டிடிவி அணியினர் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, டி.டி.வி தினகரன் அணியினரை கைது செய்த காவல்துறையினர், தாக்குதலில் ஆளானவர்களை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லாமல், கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை தனியார் திருமண மஹாலுக்கு அழைத்து சென்றனர். 
 
அவர்களை நேரில் சந்தித்த, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது., ஆளும் கட்சியினர் ரவுடிகள் மற்றும் காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கு முதலுதவி கூட அளிக்காமல் மண்டபத்தில் வைத்துள்ளனர். கரூரில் கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் வன்முறைக்கு துணையாக இருந்துள்ளனர் எனக் கூறினார். 
 
மேலும், கூட்டுறவு சங்க தலைமை தேர்தல் அதிகாரியே தொலைபேசியை எடுப்பதில்லை என குற்றம் சாட்டிய அவர், தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நீதிமன்றதில் வழக்கு தொடரப்படும் என்றார்.
 
பேட்டி : வி.செந்தில் பாலாஜி – முன்னாள் அமைச்சர் 
-சி.ஆனந்த குமார்