தினகரன் பக்கம் பிரபு எம்.எல்.ஏ ; விரைவில் ஆட்சி மாற்றம் : செந்தில் பாலாஜி பேட்டி (வீடியோ)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத்தில் 60 இடங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி அணியினர் சார்பில் இனிப்பு வழங்கி, அன்னதானம் மற்றும் இரத்த தானம் வழங்கி கொண்டாடினர்.
கரூர் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கிய பின்பு, கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாமினை முன்னாள் அமைச்சரும், டி.டி.வி தினகரனின் ஆதரவாளருமான வி.செந்தில்பாலாஜி தனது ரத்தத்தை தானமாக கொடுத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி பேசுகையில் கூறியதாவது:
அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் தான் அமைச்சராக இருக்கிறோம் என்ற பொறுப்பு இல்லாமல் எது வேண்டுமானாலும் பேசி வருகிறார். அவர் இருக்கும் எடப்பாடி அணி அதிமுக இரும்பு கோட்டை என கூறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார், அப்படி இரும்பு கோட்டையாக இருந்து இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஏன் தோற்றது.
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என கூறும் எடப்பாடி அரசு காவிரி, நீட் தேர்வு, நெடுவாசல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் இழந்து உள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இணைந்தது ஒரு அச்சாரம் தான். இன்னும் ஏராளமான எம்எல்ஏக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிடிவியிடம் வாழ்ந்து தெரிவித்து பேசி வருகின்றனர். மேலும் ஒரு ஆண்டுக்கு எடப்பாடி முதல்வராகவும் ஒராண்டுக்கு பிறகு பன்னீர் செல்வம் முதல்வராக இருப்பார் என்று கமிஷன் மண்டி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒராண்டு முடிவுற்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை பற்றி பேசி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு இடையே இருப்பது எல்லாம் ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கிறோம் வரும் வருவாயை பார்க்க வேண்டும் என்பதற்காக இது போன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர் என குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக எண்ணி இருந்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு லேடியா ? மோடியா ? என பிரச்சாரத்தில் பிரகடனப்படுத்தினார். இப்போது இருக்கும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள வருமான வரித்துறை ரைடுக்கு பயந்து மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்று கூறி வருகிறது. அப்படி இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையான எதையும் பெற்றதாக தெரியவில்லை. மாறாக, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி, நீட் தேர்வு, கதிராமங்கலம், நெடுவாசல் என அனைத்து உரிமைகளையும் இழந்து வருகிறது என்ற அவர், தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தினகரனுடன் இணைந்துள்ளார். அதுவே, தினகரன் தலைமையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அச்சாரம்” என அவர் தெரிவித்தார்.