திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 மார்ச் 2018 (15:46 IST)

ஜெயக்குமாருக்கு மண்டை ஓடு சின்னம் - போட்டுத் தாக்கும் செந்தில் பாலாஜி (வீடியோ)

காவிரி நதி நீர் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் தமிழக மக்களின் உரிமைகளை காக்க முடியாமல், எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு முதுகெலும்பு இல்லாத அரசாக செயல்படுவதாகவும், அமைச்சர் ஜெயக்குமாருக்கு மண்டை ஒட்டு சின்னம் சரியாக இருக்கும் எனவும்ன் கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் அடித்துள்ளார்.

 
கரூரில் அ.தி.மு.க அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம், கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
 
காவிரி மேலாண்மை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைந்தபட்சம் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும். அதேபோல், அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினிமா செய்திருக்க வேண்டும். ஆனால், துகெலும்பில்லாத எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு பயந்து செயல்படுகிறது. 
 
அமைச்சர் ஜெயக்குமார், பானை சின்னம், சட்டிச்சின்னம் என்றெல்லாம் கூறி இருக்கின்றார். அவர் தனது மண்டையை வைத்தே அவர் அப்படி கூறி இருக்கலாம், மேலும், எங்களது தீர்ப்பு விரைவில் வந்து விடும், அப்போது அ.தி.மு.க கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் நாங்கள் வென்றெடுப்போம்,. ஆகவே, அதற்கு பிறகு அவர்களுக்கு (ஜெயக்குமார் போன்ற அமைச்சர்களுக்கு) போன்றவர்களுக்கு என்ன சின்னம் என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்க தற்போதே ஆலோசித்து வருவதாகவும், மேலும், ஜெயக்குமாருக்கு மண்டை ஒடு சின்னம் வேண்டுமென்றால் அவருக்கு ஏற்ற சின்னம் ஏற்றதாக இருக்கும், என்றார். 
 
மேலும், தேனி மாவட்டம், குரங்கானி மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து வேறு எங்கும் நிகழாதவண்ணம், தமிழக அரசு தற்போதே முடிக்கி விடப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.