எடப்பாடி பழனிசாமி விழாவை புறக்கணித்த செங்கோட்டையன்.. செப்டம்பர் 5ல் முக்கிய அறிவிப்பா?
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அதன் தொடக்க விழாவில் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக, செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிருப்தியின் காரணமாகவே, கட்சியின் முக்கிய நிகழ்வான சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவை அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி, அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அ.தி.மு.க.வில் புதிய பிளவை ஏற்படுத்துமா அல்லது கட்சிக்குள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva