வெள்ளி, 6 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:16 IST)

உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி: செந்தில் பாலாஜி குறித்து செல்வப்பெருந்தகை..!

Selvaperundagai
உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி, சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பொய்யான குற்றச்சாட்டுகள், வழக்குகள் மூலம் உண்மையை அதிக நாட்கள் சிறையில் அடைக்க முடியாது பிரதமர் மோடி அவர்களே!

ஆட்சியில் உள்ளவர்களின் பழிவாங்கும் போக்கையும், சர்வாதிகாரத்தையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை ஆதாரமில்லாமல் முன்னாள் அமைச்சர் திரு செந்தில்பாலாஜி அவர்களை வேண்டுமென்றே சிறையில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாக நம்பியதால் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி; சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

முன்னாள் அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், கட்சியின் மீது கொண்டுள்ள ஆழமான பிடிப்பாலும் எவ்வளவோ மிரட்டியும் அமலாக்கத்துறையால் அவரை வென்றெடுக்க முடியவில்லை.

நீதியின் மீது நம்பிக்கை வைத்து போராடிய முன்னாள் அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்களின் மனஉறுதியை பாராட்டுகிறேன்.

Edited by Siva