செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:59 IST)

திமுகவுக்கு மக்கள் அல்வா கொடுக்க வேண்டும்! – செல்லூர் ராஜூ பிரச்சாரம்!

நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அல்வா தர வேண்டும் என செல்லூர் ராஜூ பிரச்சாரம் செய்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அப்போது பேசிய அவர் “மதுரைக்கு அள்ளிக் அள்ளிக் கொடுத்தவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். திமுக கொடுத்த 526 வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றி உள்ளார்களா? கேஸ் மானியம், கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் டீசல் விலை, மகளிருக்கு 1000 ரூபாய் என எதையுமே செய்யவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “மதுரைக்காரனிடம் அன்பை கொடுத்தால் அன்பை கொடுப்பான். அடியை கொடுத்தால் திருப்பி அடியை கொடுப்பான். நமக்கு அல்வா கொடுத்ததால் இந்த தேர்தலில் திமுகவுக்கு நாம் அல்வா கொடுக்க வேண்டும். நாம் இரட்டை இலைக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என்று பேசியுள்ளார்.