திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (16:38 IST)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றொரு அமைச்சர்!

அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரனோ தடுப்பூசி கடந்த சில நாட்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே பிரதமர் மோடி, உள்பட பலர் இந்த கொரனோ தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக்கொண்டனர் அதேபோல் மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாஜகவின் குஷ்பு ஆகியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.