வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (22:16 IST)

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றொரு மத்திய அமைச்சர்!

இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நேற்று முதல் போடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட பல தடுப்பூசி போட்டுக் கொண்டனர் 
 
மேலும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் உள்பட பல அமைச்சர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தடுப்பூசியை அனைவரும் தவறாமல் பயமின்றி போட்டுக் கொள்ளுங்கள் என்று ராஜ்நாத் சிங் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது