1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (16:38 IST)

ரயிலில் இருந்த ஓட்டை… பயணிகள் அச்சம்!

ரயிலில் இருந்த ஓட்டை… பயணிகள் அச்சம்!
திருச்சியில்  ரயிலில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டை இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலில் மிகப்பெரிய அளவில் ஓட்டை இருந்துள்ளது. ரயிலின் எஸ்-4 பெட்டியில் கழிவறை அருகில் ஒரு குழந்தை தவறி விழும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்துள்ளதாம். இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.