கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!
siva| Last Updated: வியாழன், 4 மார்ச் 2021 (15:23 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரனோ தடுப்பூசி கடந்த சில நாட்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

பிரதமர் மோடி, உள்பட பலர் இந்த கொரனோ தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக்கொண்டனர் அதேபோல் மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்திலும் தமிழக கவர்னரும் பன்வாரிலால் புரோகித் , பாஜக பிரமுகர் குஷ்பு உள்பட பலர் போட்டுக்கொண்டனர். அதேபோல் திரையுலக பிரமுகர்களும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
இதில் மேலும் படிக்கவும் :