ஸ்டாலினை ஓவர் டேக் செய்யும் உதயநிதி: இது என்னடா புது கதையா இருக்கு??

Sugapriya Prakash| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (18:07 IST)
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு உதயநிதி ஸ்டாலின் தற்போது கட்சிக்குள் வளர்ந்து வருகிறார் என தெரிவித்துள்ளார். 
 
திமுக குறித்து செல்லூர் ராஜு தெரிவித்துள்ளதாவது, திமுக ஒரு குடும்ப கட்சி. இது வாரிசு படி உள்ளது. திறமை இல்லாத முக ஸ்டாலின் திமுக தலைவராக உள்ளார். தன்னை தவிர கட்சியில் வேறு யாரும் தலையிட மாட்டார்கள் என்றார். 
 
திமுகவினரிடையே ஒற்றுமயில்லை. முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது கட்சியில் வளர்ந்து வருகிறார். கு.க செல்வம் விலகியது அவரது தனிப்பட்ட விருப்பம். எனங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகைனர் யார் வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :