செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (18:04 IST)

மேலும் இரண்டு திமுக தலைவர்கள் பாஜகவுக்கு செல்ல இருக்கிறார்களா? அடுத்தடுத்து காலியாகும் கூடாரம்!

திமுகவில் இருந்து சமீபத்தில் கு க செல்வம் பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு முன்னணி தலைவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்று பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் ஸ்டாலின் குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியதும் பாஜக தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கு.க.செல்வம் எம்.எல்.ஏ அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்ததாக செய்தி வெளியாகவில்லை என்றாலும் பாஜகவின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டதாக கருதப்படுகிறது. இதனை அடுத்தே திமுகவில் இருந்து அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் திமுகவில் இருக்கும் மேலும் இரண்டு முன்னணி தலைவர்கள் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அவர்களில் ஒருவர் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் நீண்டகாலமாக திமுகவில் இருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொருவர் சமீபத்தில் மற்றொரு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்து தலைமைக்கு மிகவும் நெருக்கமாகி இப்போது திமுக எம் எல் ஏவாக இருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் அடுத்த சில நாட்களில் திமுகவின் அடுத்தடுத்த இரண்டு முக்கிய விக்கெட்கள் விழ வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.