தாண்டமுத்துவுக்கு ஒரு ஆட்டோ பார்சல்: நேரடியாய் வந்த உதயநிதி !!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (15:01 IST)
சென்னை அயனாவரம் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்துவிற்கு உதவியது நிம்மதியளிக்கிறது என உதயநிதி பதிவிட்டுள்ளார். 
 
சென்னை அயனாவரம் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து, ஆட்டோக்கான காப்பீடு காலாவதியாகிவிட்டது என ஆர்.ஐ. தெரிவித்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக வருமானம் ஏதும் இல்லாததால் இன்சுரன்ஸை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக தன்னுடைய நிலையை தாண்டமுத்து எடுத்துரைத்தார். 
 
இருப்பினும் அதனை காதில் வாங்கிக் கொல்லாமல் விடாபிடியாக எஃப் சி செய்து தரமாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதனால் விரக்தியடைந்த அவர் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து தன்னுடைய ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளானது. 
இந்நிலையில் இவருக்கு உதவி செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கயா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை. அலைக்கழிப்பு விரக்தியில் தன் ஆட்டோவுக்கு தானே தீவைத்தார். அவருக்கு தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரணி சார்பில் புதிய ஆட்டோ வாங்க  நிதியுதவி செய்தேன். 
 
தாண்டமுத்துவுக்கு உதவியது மன நிம்மதியளிக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து லட்சக்கணக்கான தாண்டமுத்துக்கள் தவிக்கின்றனர். உதவ வேண்டிய அரசோ அவர்களுக்கு தொல்லைகொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :