1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan talk about trichy by election

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா?!... திருமாவளவன் ஓப்பன்..

thirumavalavan
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏழு பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவிவ்ல் இணைந்து விட்டதால் அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அங்கு தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஒருபக்கம் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் முக ஸ்டாலினை போட்டியிட வைக்க திமுக சீனியர்கள் விரும்புவதாகவும், அவருக்கு போட்டியாக விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் திருமாவளவனை போட்டியிட வைக்க தவெக தலைமை விரும்புவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன் ‘திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடப்போகிறேன் என்பது வதந்தி மட்டுமே.. ஏற்கனவே இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துவிட்டேன்.. அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மோடியின் காலாவதி தேதி நெருங்கிவிட்டது: பிரான்ஸ் கலவரத்தை ஒப்பிட்ட ராகுல் காந்திக்கு கண்டனம்!