1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn government declare new fees for auto ride

குறைந்தபட்சம் ரூ.50 - ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்...

auto
சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இயங்கும் ஆட்டோ ரிக்‌ஷாவுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது
.
அதன்படி குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டருக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலைப்பாதைகளுக்கு அடிப்படை கட்டணம் கட்டணம் ரூ.60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30 கூடுதல் கட்டணமாக வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் 1.5 மடங்கு உயர்த்திக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருக்கிறது.
 அதேபோல் காத்திருப்பு கட்டணத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது...
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்.. கரையை கடப்பது எப்போது?