1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seerkazhi schools holiday today

கனமழை எதிரொலி: இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!

holiday
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலாறு காணாத கனமழை பெய்தது என்றும் அதன் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை இருப்பதால் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மாணவர்களின் நலன் கருதி சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் கன மழையால் பெரும்பாலான பள்ளிகளில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளன என்றும் அந்த நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் ஒரு சில பள்ளிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருப்பதாகவும், அதனால் பள்ளிகளை திறக்க முடியாத சூழல் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் வேகமாக பரவு மெட்ராஸ்-ஐ: மருத்துவர்கள் எச்சரிக்கை