ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (13:11 IST)

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

rain
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று தான் மழை குறைந்து லேசாக வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் 48 மணி நேரத்தில் சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்ககடலில் வரும் 16ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மக்கள் தற்போது தான் மழை வெள்ளத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran